728x90 AdSpace


  • Latest News

    பொங்கலுக்கு முன்னரே வெளியாகும் தர்பார்?


    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் பொங்கலுக்கு முன்னதாக ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. ஆரம்பத்தில் தர்பார் படத்தை 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டது.

    இதனிடையே தற்போது படக்குழு இந்த படத்தினை பொங்கலுக்கு முன்னரே ஜனவரி 9ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி 9ம் தேதி வெளியிட்டால் 2 வாரங்கள் வசூலை குவிக்கும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: பொங்கலுக்கு முன்னரே வெளியாகும் தர்பார்? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top