728x90 AdSpace


  • Latest News

    மகேஷ்பாபுவின் சம்பளம் இவ்வளவா? திகைப்பில் திரையுலகினர்!


    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. தற்போது சரிலேரு நீக்வெவ்வரு என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். மேலும் விஜயசாந்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    அடுத்த மாதம் 11ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை 3 நிறுவங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. அதில் மகேஷ்பாபுவின் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில் இந்தப் படத்திற்காக மகேஷ் பாபு 42 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இதுவரை வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை காட்டிலும் இது இரு மடங்கு என்று கூறப்படுகிறது.

    இந்த அளவு சம்பளத்தை அவர் வாங்கியுள்ளார் என்பது உண்மையானால், தெலுங்கு சினிமாவில் ஒரு படத்துக்கு அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை மகேஷ் பாபுவுக்கு கிடைக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மகேஷ்பாபுவின் சம்பளம் இவ்வளவா? திகைப்பில் திரையுலகினர்! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top