728x90 AdSpace


  • Latest News

    அந்த மாதிரி வேடத்தை எதிர்பார்க்கிறேன்.. மனம் திறக்கும் கீர்த்தி சுரேஷ்!


    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    அவர் தனது சமீபத்திய பேட்டியில், ‘நான் அணியும் உடைகள் அழகாக இருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள். காரணம் எனக்கு பேஷன் டிசைனில் ஆர்வம் அதிகம். யார் எந்த தொழிலை செய்தாலும் மனப்பூர்வமாக நேசித்து செய்தால் ஆனந்தம் கிடைக்கும். அதுவே நமக்கு கிடைத்த வெற்றி மாதிரிதான்.

    எனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதாப்பாத்திரங்களை விரும்பி செய்கிறேன். அதுமாதிரியான கதாப்பாத்திரங்களை தான் எதிர்பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் நிலையான இடம் கிடைத்திருக்கிறது. நான் தேர்வு செய்யும் படங்களில் யார் வேலை செய்கிறார்கள், என்ன கதை, என்ன கதாப்பாத்திரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்ட பிறகு தான் ஒப்புக் கொள்கிறேன். வணிக படங்களிலும் நடிக்க ஆர்வம் இருக்கிறது' என கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அந்த மாதிரி வேடத்தை எதிர்பார்க்கிறேன்.. மனம் திறக்கும் கீர்த்தி சுரேஷ்! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top