728x90 AdSpace


  • Latest News

    மாநாடு படத்திற்காக சிம்பு செய்த காரியம்... வெளியானது புதிய தகவல்...!


    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தினை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார். ஆனால் கால்ஷீட் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புக்கு பதிலாக வேறு நடிகரை வைத்து படத்தினை எடுக்க படக்குழு முடிவு செய்தது.

    அதனை தொடர்ந்து இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இந்தப் படத்தில் சிம்பு ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சிம்பு நடித்த எந்த படத்திலும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இல்லை என்றும் , மாநாடு படத்திற்காக முதன்முறையாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



    அத்துடன் இந்த படத்திற்காக ஜனவரி 20 முதல் ஏப்ரல் 10 வரையில் தொடர்ச்சியாக சிம்பு கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த 80 நாட்களில் சிம்பு இந்த படத்தில் தனது காட்சிகளுக்கான மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

    இதனால் சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20ம் தேதி தொடங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மாநாடு படத்திற்காக சிம்பு செய்த காரியம்... வெளியானது புதிய தகவல்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top