728x90 AdSpace


  • Latest News

    கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்...!


    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான 'நான் தாண்டா இனிமேலு' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தர்பார் இசை வெளியீட்டு விழா வரும் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி- கமல் இருவரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

    இதனிடையே கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அதே போல் படப்பிடிப்பில் இருந்து ரஜினி சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    அப்போதே ரஜினி- லோகேஷ் கனகராஜ் இணைந்து பட வேலைகளில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அந்தப் படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தர்பார் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top