728x90 AdSpace


  • Latest News

    `தோனி ஒருபோதும் அதை விரும்ப மாட்டார்!’ - பிராவோ பகிரும் எம்.எஸ்.டி சீக்ரெட்...!


    மகேந்திரசிங் தோனியுடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ பேசியிருக்கிறார். 

    வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான டிவைன் பிராவோ, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் அதைத் திரும்பப் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்தில் நல்ல மாற்றங்கள் நடந்திருப்பதாகக் கூறி, தனது ஓய்வு முடிவை அவர் திரும்பப் பெற்றிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு டி20 தொடர்களில் விளையாடி வரும் பிராவோ, ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    தோனி - பிராவோ
    தோனி - பிராவோ
    `தோனி மாதிரி வராது. ஆனா...!' கோலியின் அதிரடி ஆட்டத்துக்கு மக்களின் மைண்ட் வாய்ஸ் #VikatanPollResults
    இந்தநிலையில், தோனியுடன் விளையாடிய அனுபவம் மற்றும் அவரது வழிகாட்டுதல்கள் குறித்து பிராவோ பேசியிருக்கிறார். உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், `அவர் விரைவில் ஓய்வுபெற்று விடுவார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார்' போன்ற தகவல்கள் வெளிவந்தன. ஆனால், டி20 உலகக் கோப்பை தொடரில் தோனி, நிச்சயம் விளையாடுவார் என பிராவோ தெரிவித்திருக்கிறார்.
    இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய பிராவோ, ``தோனி எப்போதும் ஓய்வுபெற மாட்டார். அதனால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் தோனி நிச்சயம் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டுக்கு வெளியில் நடக்கும் சம்பவங்கள் தன்னை பாதிப்பதை தோனி எப்போதும் விரும்ப மாட்டார். அதையே எங்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். `எப்போதும் பயம் கொள்ளக் கூடாது மற்றும் எங்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்' என்பது தோனி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம்'' என்றார்.
     
    தோனி - பிராவோ
    தோனி - பிராவோ
    ஓய்வுமுடிவைத் திரும்பப் பெற்றது குறித்து பேசிய பிராவோ, ``கிரிக்கெட்டுக்கு வெளியில் நடந்த அரசியலால் ஓய்வு முடிவை எடுத்தேன். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு மற்றும் அணியில் நடந்த சமீபத்திய மாற்றங்கள், நம்பிக்கையை அளித்திருக்கிறது.

    அதனால், ஓய்வு முடிவைத் திரும்பப் பெற இதுவே சரியான நேரம் என்று நினைத்து, அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி, இளமையான மற்றும் திறமையான வீரர்களைக் கலவையாகக் கொண்டிருக்கிறது. ரஸல், சுனில் நரேன் போன்றவர்கள் அணிக்குத் திரும்பினால் கூடுதல் வலுவடையும். உலக அளவில் அசைக்க முடியாத அணியாக மீண்டும் நாங்கள் வலம்வருவோம்'' என்று பிராவோ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: `தோனி ஒருபோதும் அதை விரும்ப மாட்டார்!’ - பிராவோ பகிரும் எம்.எஸ்.டி சீக்ரெட்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top