வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிரவு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலத்தின் கீழ்மட்டத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீட்டர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.