728x90 AdSpace


  • Latest News

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினாரா புவனேஷ்வர் குமார்?


    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார்.

    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

    இதனை தொடர்ந்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் முனைப்புடன் விளையாடும். இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான தீவிர வலைப்பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இதனை தொடர்ந்து காயம் குணமாகாத காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து புவனேஷ்வர் குமார் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகினாரா புவனேஷ்வர் குமார்? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top