728x90 AdSpace


  • Latest News

    சர்ச்சைக்கு பிறகு கமலை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்..!


    தர்பார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் சிறு வயதில் கமல்ஹாசன் போஸ்டரில் சாணி அடித்ததாக தெரிவித்தார். மேலும் தற்போது கமலும், ரஜினியும் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேசினார். இதனால் கமல் ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் மீது அதிருப்தி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரும் விளக்கம் அளித்து பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், தற்போது கமல்ஹாசனை நேரில் சந்தித்த ராகாவா லாரன்ஸ் அவருடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “வணக்கம்! அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

    எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன். இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை அவரது அலுவலகத்திற்கு நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல்ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    அன்புடன் ராகவா லாரன்ஸ்”. என்று பதிவிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சர்ச்சைக்கு பிறகு கமலை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்..! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top