728x90 AdSpace


  • Latest News

    தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்கிறார் பிரியாமணி...!


    சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்களாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்திற்கு தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். மேலும் எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார்.

    இந்த படத்தில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கதாப்பாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் சசிகலா கதாப்பாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: தலைவி படத்தில் சசிகலாவாக நடிக்கிறார் பிரியாமணி...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top