728x90 AdSpace


  • Latest News

    என் காதலை நடிகை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா?... நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆவேச டுவீட்!


    மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை ப்ரியா பவானி சங்கர் அறிமுகமானார். அவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களிலும் நடித்தார். மான்ஸ்டர் படத்துக்கு பிறகு, எஸ்.ஜே.சூர்யா- ப்ரியா பவானி சங்கர் கோடி, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பொம்மை படத்திலும் நடித்து வருகிறாக்ரள்.

    கடந்த சில நாட்களுக்கு முன், பொம்மை படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கம் கொஞ்சம் சிம்ரன் போலவும், கொஞ்சம் த்ரிஷா போலவும் இருக்கிறார் அல்லவா என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு ஒரு ரசிகர், சிம்ரன் பாதி, த்ரிஷா பாதி கலந்து செய்த கலவை ப்ரியா பவானி சங்கர் என பதில் அளித்திருந்தார். இதனை எஸ்.ஜே.சூர்யா ரிடுவீட் செய்தார்.

    இந்நிலையில், டுவிட்டரில் எஸ்.ஜே.சூர்யா, நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் நான் காதலை தெரிவித்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் சில முட்டாள்கள் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். மான்ஸ்டர் படம் முதல் அவர் என்னுடைய நல்ல நண்பர், நல்ல நடிகை அவர். அவ்வளவுதான். என்னை வெறுப்பேற்ற வேண்டாம் என்றும், அடிப்படை ஆதாரமில்லாத அவதூறுகளை பரப்ப வேண்டாம் என்றும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: என் காதலை நடிகை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா?... நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆவேச டுவீட்! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top