728x90 AdSpace


  • Latest News

    விராட் கோலியை புகழ்ந்த சாருலதா பாட்டி மரணம்... பிசிசிஐ இரங்கல்...



    இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான சாருலதா பாட்டியின் மறைவுக்கு பிசிசிஐ தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் வங்கதேச அணியுடனான இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க சென்ற 87 வயதான சாருலதா படேல் பாட்டி, நாடு முழுவதும் ஒரே இரவில் கவனத்தை ஈர்த்தார். அவர் ஜனவரி 13 ஆம் தேதி காலமானார்.

    சாருலதா தனது குடும்பத்தினருடன் போட்டியைக் காண மைதானத்துக்கு சென்றதால், அனைவரின் இதயத்தையும் வென்றிருந்தார். சாருலதா பாட்டியின் உற்சாகத்தால் ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் திகைத்துப் போனார்கள். 

    உண்மையில், பங்களாதேஷுக்கு எதிரான போட்டி முடிந்ததும், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும், மைதானத்தில் சாருலதா பாட்டியை காண சென்றனர்.

    இந்நிலையில், அனைவரையும் உற்சாகத்தில் மூழ்கடித்த சாருலதா பாட்டி 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு காலமானார். இந்த தகவலை உறுதிப்படுத்திய ஐசிசிஐ, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், சாருலதா படேல் பாட்டிக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “இந்தியாவின் சூப்பர் ரசிகரான சாருலதா படேல் ஜி எப்போதும் விளையாட்டு வீரர்களின் இதயத்தில் நிலைத்திருப்பார். 

    அவரின் விளையாட்டின் மீதான ஆர்வம் வீரர்களை ஊக்கப்படுத்தியது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: விராட் கோலியை புகழ்ந்த சாருலதா பாட்டி மரணம்... பிசிசிஐ இரங்கல்... Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top