100 ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (09) இரண்டாவது நாளாகவும் தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இதன்போது, நிலானி ரத்னாயக்க மற்றும் கயந்திகா அபேரத்ன ஆகியோர் இலங்கை சாதனை படைத்துள்ளனர்.
நிலானி ரத்னாயக்க மகளிருக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப்போட்டியில் இலங்கை சாதனையை படைத்துள்ளார்.
போட்டியை அவர் 9 நிமிடங்கள் 40.24 விநாடிகளில் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், கயந்திகா அபேரத்ன 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையை புதுப்பித்தார்.
அவர் 2 நிமிடங்கள் 01.44 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.
0 Comments :
Post a Comment