``அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடை திரும்பப் பெறப்படும்'' என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபரானார். சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாக ட்விட்டர் நிறுவனம் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கை மீட்டுத்தரக்கோரி டொனால்டு ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 'TRUTH' எனும் சோஷியல் மீடியா நிறுவ்னம் ஒன்றை ட்ரம்ப் தொடங்கினார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். பைனான்சியல் டைம்ஸ் நடத்திய உச்சிமாநாட்டில் பேசிய மஸ்க், ``அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு மீதான தடை திரும்பப் பெறப்படும். ட்ரம்ப் மீதான ட்விட்டர் தடை தார்மீக ரீதியாக இது மிகவும் தவறான செயல். மேலும் இது ஒரு முட்டாள்தனமான முடிவு'' என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கினாலும் நான் ட்விட்டர் பக்கம் வரமாட்டேன் என டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments :
Post a Comment