தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும்: கடற்றொழிலாளர்களுக்கான அறிவித்தல்...!தாழமுக்கம் காரணமாக தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் தீவை அண்மித்த கடற்பிராந்தியங்களை மறு அறிவித்தல் வரை பயன்படுத்த வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தாழமுக்கம் காரணமாக கடற்பிராந்தியங்களில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடைக்கிடையே, மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

About Star FM Lanka

சுடச் சுடச் செய்திகளை முந்திக் கொண்டு உடனுக்குடன் வழங்குகின்றோம் "Star Radio Network Sri Lanka " www.starfm.lk, starfmsrilanka@gmail.com.

0 Comments :

Post a Comment