அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்துவது அவசர நிலை அல்ல: ஹனா சிங்கர்அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்துவது அவசர நிலைமையல்ல என ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்கு காரணமான விடயங்களை தீர்க்க முயல வேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவசரகால சட்டம் நிச்சயமாக உதவாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கை பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதை ஒரு மாத கால அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அவசரகால சட்டம் எதிர் விளைவை ஏற்படுத்தும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.

News1st


About Star FM Lanka

சுடச் சுடச் செய்திகளை முந்திக் கொண்டு உடனுக்குடன் வழங்குகின்றோம் "Star Radio Network Sri Lanka " www.starfm.lk, starfmsrilanka@gmail.com.

0 Comments :

Post a Comment