ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்கள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
தற்போது 136 சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளடன், 61 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.
இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதையும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி இதற்கான ஆலோசனையை வழங்குவதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
0 Comments :
Post a Comment