நியூஸிலாந்து பிரதமருக்கு COVID தொற்று...!


நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் அறிகுறிகள் தென்பட்டதுடன், இன்று காலை அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நியூஸிலாந்து அரசின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தினத்திலும் அவரால் பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நியூஸிலாந்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

About Star FM Lanka

சுடச் சுடச் செய்திகளை முந்திக் கொண்டு உடனுக்குடன் வழங்குகின்றோம் "Star Radio Network Sri Lanka " www.starfm.lk, starfmsrilanka@gmail.com.

0 Comments :

Post a Comment