இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாட சஜித், அனுரகுமாரவிற்கு SLFP அழைப்பு...எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு சர்வ கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வழங்க முடியுமான சிறந்த தீர்வாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கொள்கை ரீதியிலான அரசியல் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக ஒரு அறிவார்ந்த கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த ஆலோசனைக் கோவையை அடிப்படையாகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.


About Star FM Lanka

சுடச் சுடச் செய்திகளை முந்திக் கொண்டு உடனுக்குடன் வழங்குகின்றோம் "Star Radio Network Sri Lanka " www.starfm.lk, starfmsrilanka@gmail.com.

0 Comments :

Post a Comment