Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்திய இதிகாச புராணங்களிலிருந்து உருவான 'பிரம்மாஸ்திரா-1'


பொலிவூட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான ரன்பீர் கபூர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் மூன்று பாகங்களாக தயாராகி இருக்கிறது. இதன் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாகிறது.

பொலிவுட்டின் நட்சத்திர இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் தயாரான புதிய திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இதில் ரன்பீர் கபூர் கதையின் நாயகனாக நடிக்க நடிகை ஆலியா பட் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நாகார்ஜுனா, அமிதாப்பச்சன், ஷாருக்கான், மௌனி ராய், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

இந்திய புராணங்களில் இடம்பெறும் அஸ்திரங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த சாகச கற்பனை கலந்த படத்தை ஹாட்ஸ்டார் ஸ்டுடியோஸ், தர்மா புரொடக்‌ஷன்ஸ், ப்ரைம் ஃபோகஸ், ஸ்டெர்லைட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாரித்துள்ளனர். இந்த பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகிறது.

படத்தை பற்றி தமிழில் வெளியிடும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி பேசுகையில், '' இந்திய திரைப்பட வரலாற்றில் பிரம்மாஸ்திரா ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். எம்முடைய இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கலந்த கதை தான் இது. இந்த திரைப்படம் இயக்குநர் அயன் முகர்ஜி தலைமையிலான குழுவினரின் எட்டு ஆண்டு கடின உழைப்பு. இதில் கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் ஆகியோர்களின் பங்களிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை வணிக ரீதியாக திரையில் சொல்லி இருப்பதால் அனைவரையும் கவரும்.'' என்றார்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகி வெளியாகும் இந்தி திரைப்படங்கள் வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மூன்று பாகங்களாக தயாராகி இருக்கும் பிரம்மாஸ்திரா படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாவதால் வசூலில் வெற்றி பெறும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments