Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சபுகஸ்கந்த மண்ணெண்ணெய் உற்பத்தி: இரு தினங்களில் 10 இலட்சம் லீற்றர் நாடளாவிய ரீதியில் விநியோகம்...!


சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து கடந்த இரு தினங்களில் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் அங்கிருந்து

விநியோகிக்கப்பட்டதாக அந்த நிலையத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

விநியோகிக்கப்பட்டுள்ள 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் உற்பத்தி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் மண்ணெண்ணெய்க்கு நிலவும் நெருக்கடியை குறைத்துக்கொள்ள முடியுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து மசகு எண்ணெய்க் கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டை வந்தடைந்ததையடுத்து சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments