Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தாய்லாந்து இரவு விடுதியில் தீ: 13 பேர் பலி, 40 பேர் காயம்…!

தாய்லாந்தில் இரவு விடுதியொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பொட் எனும் இரவு விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

பெரும் தீயினால், பீதியடைந்த மக்கள் விடுதியைவிட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறிய காட்சி வெளியானது. இந்நிலையில், 3 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


எனினும், 13 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் 4 பெண்களும் அடங்கியுள்னர். இறந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments