Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரக்பியில் இலங்கை 14ஆம் இடம்...!


இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இலங்கை ஆடவர் ரக்பி அணி 12–16 அணிகளை வரிசைப்படுத்தும் போட்டியில், சாம்பியா அணியை எதிர்கொண்டிருந்ததுடன், இந்த போட்டியில் பெற்ற வெற்றியினால் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது.

இந்தப்போட்டியில் இலங்கை அணி 27–14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 13ஆவது இடத்துக்கான போட்டியில் ஜமைக்கா அணியை இலங்கை அணி எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் துரதிஷ்டவசமான முறையில் இலங்கை அணி 24–26 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் 14ஆவது இடத்தை பிடித்து தொடரை நிறைவுசெய்தது. பெண்களுக்கான 7ஆவது இடத்துக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி தென்னாபிரிக்காவிடம் புள்ளிகள் எதுவுமின்றி தோல்வியடைந்தது. இந்தப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 52–0 என வெற்றிபெற்றிருந்தது.

எனவே, 8ஆவது இடத்துடன் இம்முறை போட்டித்தொடரை இலங்கை மகளிர் அணி நிறைவுசெய்துக்கொண்டது.

Post a Comment

0 Comments