Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமேசனில் 15 ஆண்டுகள் இல்லாத கடும் காட்டுத் தீ...!

 

பிரேசிலின் அமேசன் மழைக்காடுகளில் 15 ஆண்டுகள் காணாத அளவில் காட்டுத்தீ இவ்வாரம் பரவியுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று (ஓகஸ்ட் 22) 3,358 காட்டுத்தீச் சம்பவங்களைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டின. அது, 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து இதுவரை 24 மணிநேர இடைவெளியில் பதிவான மிக அதிகமான காட்டுத்தீச் சம்பவங்களின் எண்ணிக்கையாக உள்ளது.

அமேசன் காட்டுத் தீச் சம்பவங்கள் திட்டமிட்டவையல்ல என்று பிரேசிலிய விண்வெளி நிறுவனம் தெரிவித்தது.

காடுகள் எரிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் அதிகரித்திருப்பதால் தீச்சம்பவங்கள் அதிகரித்தவண்ணம் இருப்பதாக அது விளக்கியது.

சட்டவிரோதமாகச் செயல்படும் விவசாயிகளும் பண்ணைக்காரர்களும் மரங்களை எரித்துக் காடுகளை அழிப்பதன் மூலம் அமேசன் மழைக்காடுகளில் தீ பரவுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். பிரேசிலில் அத்தகைய காடழிப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் அதிகரித்திருக்கின்றன.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments