Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 17 பேர் யாழ். பருத்தித்துறையில் கைது!



யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியிலிருந்து வெளிநாடு செல்ல முற்சித்த 17 பேர் இன்று (29) திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிலர் நடமாடுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டொன்று செல்ல முற்றபட்டதாக தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments