Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகளவில் குரங்கம்மை பாதிப்பு 20 வீதம் வீழ்ச்சி..!


உலக அளவில் குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வாரம் 20 வீதத்துக்கு மேல் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் தொற்று பரவி வருகிறது.

குரங்கம்மைத் தடுப்புமருந்துகளின் அளவு குறைவாகவே உள்ளது. அந்தப் பற்றாக்குறையைக் கையாள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், குறைந்த அளவில் தடுப்புமருந்தைச் செலுத்துகின்றன.

ஆனால் அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா என்று குரங்கம்மைத் தடுப்புமருந்துத் தயாரிப்பு நிறுவனமான பவரியன் நோர்டிக் கேள்வி எழுப்பியுள்ளது.

குரங்கம்மைத் தடுப்புமருந்தைக் குறைந்த அளவில் செலுத்துவது பற்றி உலக சுகாதார அமைப்பு மறுஆய்வு செய்கிறது. ஜூலையில் குரங்கம்மைத் தொற்று தொடர்பான விழிப்புநிலையை உலக சுகாதார அமைப்பு மிக அதிகமாக உயர்த்தியிருந்தது.

கொவிட் நோய்ப்பரவலோடு குரங்கம்மையும் ஒரு பொதுச் சுகாதார நெருக்கடி என்று வகைப்படுத்தப்பட்டது. உலக அளவில் இவ்வாண்டில் குரங்கம்மைத் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 45ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments