Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

24 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் போலந்து பிரஜை கைது…!



குறித்த போலந்து பிரஜை எடுத்து வந்த பயணப் பொதியை அவரால் கொண்டு செல்ல முடியாது, முதலில் விமான நிலையத்திலிருந்து வெளியேறி, பின்னர் மீள பயணப் பொதியை எடுத்து செல்வதற்காக வந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவினர் கூறினர்.

பயணப் பொதி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, பயன்படுத்தப்பட்ட தொலை நகல் இயந்திரம் ஒன்றுக்குள், கடதாசி சுருள்களுக்குள் சுமார் 5 கிலோ கிராம் நிறைக் கொண்ட கொக்கைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே போலந்து பிரஜையை கைது செய்துள்ள சுங்கப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments