Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

முன்னாள் ஜனாதிபதி 24இல் நாடு திரும்புவார்...!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

விமானப்படையினருக்கு மிக் விமானம் கொள்ளளவு செய்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் நேற்று முற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திலிருந்து வெளியேறிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்குத் திரும்பி மக்களுக்கு சேவை செய்வாரென்றும் எவ்வாறாயினும் அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட மாட்டாரென்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments