Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மட்டக்களப்பு சென்று கொண்டிருந்த பஸ் விபத்தில் சிக்கியது: 27 பேர் காயம்!


வலப்பனை மாவுவா பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 27 பேர் காயமடைந்த நிலையில் பலத்த காயமடைந்த 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.



மட்டகளப்பு பகுதியிலிருந்து உடபுஸல்லாவ பகுதிக்கு திருமண வீட்டுக்கு வருகை தந்து மீண்டும் மட்டகளப்பு நோக்கி செல்லும் வழியில் மாவுவா பகுதியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பஸ் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 27 பேர் காயமடைந்த நிலையில் அவரகளில் பலத்த காயமடைந்த ஆறு பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர் .



விபத்து தொடர்பாக வலப்பனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments