Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

2 ஆண்டுகளுக்குப் பின் பாடசாலை திரும்பிய பிலிப்பைன்ஸ் மாணவர்கள்...!


கொவிட் பெருந்தொற்றினால் உலகில் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் பாடசாலைகள் நேற்று (22) திறக்கப்பட்டதை அடுத்து மில்லியன் கணக்கான மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொலைதூர கல்வி முறை செயற்படுத்தப்பட்ட நிலையில் நாட்டின் சுமார் பாதி அளவான பாடசாலைகளின் வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.

சுமார் 24,000 அரச பாடசாலைகள் அல்லது பாதிக்கும் குறைவான பாடசாலைகளில் ஐந்து நாட்கள் வகுப்பறைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை தனிப்பட்ட அல்லது ஒன்லைன் வகுப்புகளை நடத்தும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில் மூன்று மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவானதோடு சுமார் 50,000 பேர் உயிரிழந்தனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments