Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய வானிலை அறிக்கை: சில இடங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி...!


இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 ஓகஸ்ட்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 ஓகஸ்ட்31ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,தென்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீஅளவானபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (31ஆம் திகதி) கப்பச்சி (வவுனியா மாவட்டம்), தம்மன்னேகுளம (அனுராதபுரம் மாவட்டம்) மற்றும் உப்புவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments