Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 3250 ரூபா வழங்கப்படவேண்டும் - வடிவேல் சுரேஷ் கோரிக்கை...!


நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய தோட்டத் தொழிலாளர்களுக்கு 3250 ரூபா நாளாந்த சம்பளம் வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் தொழில் அமைச்சரை சந்தித்து கோர உள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் உரை நல்லது. ஆனால் அது செயல்வடிவில் இருக்க வேண்டும்.சீரற்ற காலநிலையால் நாவலபிட்டிய, ஹட்டன், பதுளை உட்பட பல பிரதேசங்களில் 6 பேர் கொல்லப்பட்டார்கள்.அவர்களுக்கு எமது அனுதாபங்களை தெரிவிக்கிறோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முதலாளிமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மனித நேயம் காப்பாற்றப்பட்டுள்ளது. நாளை தொழில் அமைச்சரை சந்திக்கிறோம். வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ப உடனடியாக 3250 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழில் அமைச்சர் அதனை நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று மலையக மக்களின் காணி உரிமை,தொழில் உரிமை என்பவற்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். பசறை மற்றும் லுணுகல,ஹப்புத்தளை,ஹாலிஎல, என்பன நகரசபைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும். எனவே பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நீதியாக செயற்படவேண்டும். நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.தொழில் சட்டத்திற்கு அமைய தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பு கம்பனிகளுக்கான சாவுமணியாகும். அதனால் கிலோ பற்றி பேசாமல் 3250 ரூபாவை வழங்க வேண்டும்.

அதேபோன்று மலையத்தில் இருக்கும் தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்கவேண்டும். பாராளுமன்றம் மலைய மக்களின் காணி உரிமையை வழங்க நடவடிக்கை வேண்டும் என ஜனாதிபதியை கோருகிறோம் என்றார்

Post a Comment

0 Comments