Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்…!


கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

கோவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் கொங்குமண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். கொங்கு மண்டல சுற்றுப்பயணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்குகிறார். 

இதற்காக வருகிற 23-ந் தேதி மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவைக்கு வரும் முதல்-அமைச்சரை தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்று கொள்ளும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேராக ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். 

அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள் காலை 10 மணிக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்றுகிறார். தொடர்ந்து முடிவுற்ற 226 திட்ட பணிகளையும் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 261 புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Post a Comment

0 Comments