Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் சிஐடியினர் 3 மணி நேரம் விசாரணை!


மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் கொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி மன்னிப்பின்போது, இலஞ்சமாக பணம் பறிமாற்றப்பட்டதா என சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அதன்படி, இந்த விசாரணைகளில் அங்கமாக முன்னாள் ஜனடஹிஒபதி மைத்திரிபால சிறிசேனவை 3 மணி நேரம் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு விசாரணை செய்துள்ளது.

நேற்று முன்தினம் ( 18) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்ற சிறப்புக் குழுவினர் இவ்வாறு அவரிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து கொண்டதாக சிஐடியின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையை மையப்படுத்தி கடந்த ஜூன் 23 ஆம் திகதி சிஐடியில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார்.

இதனைவிட இந்த விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முறைப்பாடு ஒன்றை அளித்திருந்தார்.

இவ்விரு முறைப்பாடுகளையும் மையப்படுத்தி இந்த விசாரணைகள் சிஐடியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய இவோன் ஜொன்சன் எனும் யுவதியை அவர் அணிந்திருந்த காற்சட்டைக் கொண்டு கழுத்தை நெரித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டை 64 இடங்களில் சேதபப்டுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ கடந்த 2019 நவம்பர் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.

மரண தண்டனை விதிக்கப்ப்ட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே 2019 நவம்பர் 9 அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments