Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உலகில் உணவிற்கான பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தில் இலங்கை...!


உலகில் உணவிற்கான பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலகில் உணவிற்கான அதிகளவு பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் பதிவாகியுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஸிம்பாப்வே, வெனிசூலா, துருக்கி ஆகிய நாடுகள் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜூலை மாதம் பொருட்களின் விலை அதிகரிப்பு அல்லது பணவீக்கம் 66.7 வீதமாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே இலங்கையில் இதுவரை பதிவான அதிகூடிய பணவீக்க வீதமாகும்.

ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 82.5 வீதத்தால் அதிகரித்துள்ளது.

பால் மா, அரிசி, மீன், பிஸ்கட் மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு 52.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments