
துபாயில் இருந்து நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னை வந்த பயணிகள்
விமானம் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு
இருப்பி அனுப்பப்பட்டது. அதேபோல் இரவு 8.35 மணிக்கு லக்னோவில்
இருந்து வந்த விமானமும், இரவு 8.50 மணிக்கு பகரைன் மற்றும் மும்பையில் இருந்து வந்த 2 விமானங்களும், 9.25 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானமும் மழையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும் சென்னையில் இருந்து திருச்சி, அபுதாபி, டெல்லி, மும்பை, கோவை,
கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு செல்ல வேண்டிய 12-க்கும் மேற்பட்ட
விமானங்கள் ஒரு மணி முதல் 3 மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு
செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை சீரான பிறகு
பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட 5 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு
திரும்பி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments