Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரச வங்கியில் 6 கோடி ரூபா மோசடி; உடந்தையான முன்னாள் உத்தியோகத்தர் கைது!


​அரச வங்கியொன்றில் சுமார் 6 கோடி ரூபா பணத்தை மோசடி செய்வதற்கு உதவியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கணக்காய்வாளரினால் முறைப்பாடாளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் கடனைப் பெறுவதற்காக 48 வெவ்வேறு நபர்களின் ஆவணங்களைப் போன்று போலி ஆவணங்களைத் தயாரித்து , 6 கோடியே 83 இலட்சத்து 40,000 ரூபா பணத்தை மோசடி செய்வதற்கு குறித்த பெண் ஊழியர் உதவியுள்ளதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வந்த நீண்ட விசாரணைகளின் பின்னர் நேற்று (06) சனிக்கிழமை கோட்டை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 62 வயதுடைய கடவத்தை – பியன்வல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த மோசடியுடனான பிரதான சந்தேக நபரான பிறிதொரு பெண் உயிரிழந்துள்ளார். அவரும் வங்கி ஊழியராவார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments