Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செங்கடல் பற்றிய சுவாரஸ்யமான 8 உண்மைகள்...!


செங்கடல் (Red Sea) அல்லது எரித்ரேயன் கடல் (Erythraean Sea) என்பது இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் கடல் நீர் உட்செல்லும் நுழைவாயில் ஆகும்.

இது ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் உள்ளது. 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேலடுக்குத் தட்டு மாற்றத்தின் விளைவாக செங்கடல் முதலில் உருவானது. இந்த கட்டுரையில் செங்கடல் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்க்கலாம்.

அரேபிய தீபகற்பம் ஆப்பிரிக்காவிலிருந்து விலகி, இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் நீர் வழியால் பிரிக்கப்பட்டது. செங்கடல் இயற்கை அன்னையால் வழங்கப்பட்ட பரிசு என்றும் கூறப்படுகிறது.

செங்கடலைச் சுற்றியுள்ள நிலம் ஒப்பிடமுடியாத அழகும், கடல் வளங்களும் கொண்ட ஒன்றாகும், செங்கடலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும், தொலைவில் உள்ள மற்ற பகுதிகளிலிருந்து மிகவும் மாறுபாட்ட பார்வையை வழங்குகிறது. செங்கடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே உங்களுக்காக;

  1. மொத்தம் 9 நாடுகள் செங்கடலின் கரையோரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. சூயஸ் கால்வாய் வழியாக செங்கடல் (Red Sea) வடக்கில் மத்தியதரைக் கடலுடன் (Mediterranean Sea) இணைகிறது. பாப் அல் மந்தாபின் (Bab al Mandab) குறுகிய நீரிணை வழியாக, இது தெற்கே இந்தியப் பெருங்கடலில் இணைகிறது.
    செங்கடலில் குறைந்த பட்சம் 25 தீவுகள் உள்ளன. ஐலண்ட் ஆஃப் ப்ரதர் (Islands of Brother), ராக்கி (Rocky), கிஃப்டன் (Giftun), டிரான் (Tiran), சபர்காட் (Zabargad), ஷெட்வான் (Shedwan) மற்றும் பல தீவுகள் இதில் அடங்கும்.
  2. அரபு மொழியில் செங்கடல் (Red Sea) அல்-பஹ்ர் அல்-அஹ்மர் (Al-Bahr al-Ahmar) என்று அழைக்கப்படுகிறது.
  3. இது ஆரம்பத்தில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பூமி மேலடுக்கு சுழற்சி மூலம் உருவானது. செங்கடலின் நீளம் 2,250 கி.மீ. செங்கடலின் அதிகபட்ச ஆழம் 2,850 மீட்டர் அல்லது 2.85 கி.மீ ஆழம். சராசரியாக, செங்கடலின் அகலம் 300 கி.மீ.
  4. செங்கடலில் 1200-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மீன்கள் உள்ளன, அவற்றில் 17 சதவீத மீன் இனங்கள் செங்கடலில் மட்டுமே காணப்படுகின்றன. 250 வகையான பவளங்களும் செங்கடலில் காணப்படுகின்றன. அவற்றில் 8 சதவீத வகை பவளங்கள் செங்கடலில் மட்டுமே காணப்படுகிறது.
  5. நீர் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை அடைகிறது. மேலும் இந்த கடலின் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  6. செங்கடலைப் பற்றிய மற்றோரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், செங்கடலில் மட்டும் இதுவரை சுமார் 17 பெரிய கப்பல் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இவை எகிப்திய எல்லை / கரையோரத்திற்கு அருகில் நடந்தவை.
  7. ராஸ் முகமது (Ras Mohammad) மற்றும் செங்கடலின் கரையோரப் பகுதிகளில் ஏராளமான சதுப்பு நிலங்கள் உள்ளன.
  8. இந்த நீர்நிலை ஏன் செங்கடல் என்று அழைக்கப் படுகிறது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன. விஞ்ஞானிகள் இது பற்றி, “இந்த நீரில் அதிக அளவில் நீல நிற கடற்பாசியானது (Blue algae) வளர்கிறது, இவை தண்ணீருக்குள் ஒரு தனித்துவமான நிறத்தை வெளியிடுகின்றன, இதனால் அது சிவப்பு நிறமாக மாறுகிறது” என்று கூறுகின்றனர்.
    சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமம் ஆகும் பொழுது, அதன் கதிர்கள் கடல் நீரில் பிரதிபலிப்பதால் தான் செங்கடல் (Red Sea) இந்த சிவப்பு நிறத்தில் தெரிகிறது என்றும் சிலர் நம்புகிறார்கள்.

Post a Comment

0 Comments