Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

புறப்பட்ட சில நிமிடங்களில் பற்றியெரிந்த போக்குவரத்து படகு: 85 பயணிகளின் நிலை?

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவுகளுக்கு இடையேயான போக்குவரத்து படகு ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பற்றியெரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் படகு ஊழியர்கள் மற்றும் பயணிகள் 85 பேர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இருவர் மட்டும் மீட்கப்படாமல் இருந்த நிலையில், அவர்கள் இருவரும் வேறு போக்குவரத்து படகில் கரை சேர்ந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய படகானது கலபன் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால், படங்காஸ் துறைமுகத்திற்கும் ஒரு மைல் தொலைவில் வைத்து, படகில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது.

மட்டுமின்றி, நெருப்பும் பற்றிக்கொள்ள, பயணிகள் அச்சத்தில் தண்ணீரில் குதித்துள்ளனர். மீட்கப்பட்ட பயணிகளில் ஒருவர் கூறுகையில், கடலோர காவல் படையினர், அருகில் இருந்த பாங்காக்கள் மற்றும் இழுவை படகுகள் மூலம் தங்களை தண்ணீரில் இருந்து மீட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த படகில் கொண்டு செல்லப்பட்ட 16 வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 38 ஊழியர்களும் 47 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு பயணி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments