Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் ; 9 பேருக்கு பாதிப்பு


இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளதன் மூலம், இந்தியா முழுவதும் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 5 பேரும்டெல்லியைச் சேர்ந்தவர்கள் 4 பேரும் அடங்குவர். அmவர்களில் 9 பேரில் 5 பேர் வெளிநாட்டவராவார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிப்பின்படி, குரங்கு அம்மை பெரியம்மை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தால் உருவாகும் பாதிப்பு. ஆனால் பெரியம்மையைவிட குறைவான அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

நோய்த் தொற்று ஏற்பட்டவரின் படுக்கை, போர்வை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அறிகுறி காணப்பட்ட உடனேயே வைத்தியசாலையை நாட வேண்டும். மருத்துவர்கள் குரங்கு அம்மையாக இருக்கும் என்று சந்தேகப்பட்டால் கூட அந்த நபரை தனிமைப்படுத்திட வேண்டும்.

Post a Comment

0 Comments