Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Asia Cup 2022 ஒரு பார்வை: முதல் போட்டியிலேயே இலங்கையை வென்ற ஆப்கானிஸ்தான் அணி...!


"இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்"

நேற்றையதினம் (27) ஆரம்பமான, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியிலேயே ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வெற்றி ஈட்டியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்ப்பில் பானுக ராஜபஷ 38 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பஸால்ஹக் பரூகி 3 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதற்கமைய, 106 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றியீட்டியது.

இலங்கை அணி சார்பில் வணிந்து ஹசரங்க 6.1 ஆவது ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

மற்றைய விக்கெட் பந்துவீச்சின் போது மஹீஷ் தீக்‌ஷணவின் கையில் பட்ட பந்து விக்கெட்டில் பட்டதன் மூலம் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் 40 ஓட்டங்களையும், ஹஸ்ரதுல்லாஹ் ஷஷாய் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேவேளை, இன்றையதினம் (28) பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பி.ப. 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆட்ட நாயகனாக பஸால்ஹக் பரூகி தெரிவானார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments