Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கிரைமியாவில் ரஷ்யாவின் மற்றொரு படைத்தளத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள்…!



கிரைமியாவிலுள்ள ரஷ்ய இராணுவத் தளமொன்றின் நேற்று தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.


கிரைமியாவிலுள்ள (Crimea) ரஷ்ய விமானப்படைத் தளத்தில் கடந்த 9 ஆம் திகதி பாரிய குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் 8 போர் விமானங்களும் அழிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில் கிரைமியாவிலுள்ள, ரஷ்யாவின் மற்றொரு படைத்தளத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன.

டு;ஸான்கோய் பகுதியிலுள்ள இப்படைத்தளத்தில் தீயின் காரணமாக வெடிப்புகள் இடம்பெற்றதாகவும், இதற்கு சதிவேலைகளே காரணம் எனவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இத்தாக்குதலுக்கு யுக்;ரைன் அரசு பொறுப்பேற்கவில்லை. எனினும், யுக்ரைன் ஜனாதிபதியின் அதிகாரிகளின் பிரதானி அண்ட்ரி யார்மாக் இது தொடர்பாக கூறுகையில், யுக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை யுக்ரைனியப் படையினரின் இராணுவமய நீக்கல் நடவடிக்கை தொடரும் எனக் கூறியுள்ளார்.

இதனால், இச்சம்பவம் ஒரு விபத்து அல்ல எனக் கருதப்படுகிறது.
யுக்ரைனின் ஒரு பிராந்தியமாக இருந்த கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments