இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது.
தென்னாசிய நாட்டின் கடன்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு உதவும் என்ற நம்பிக்கையில் இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது எனினும் நிச்சயமற்ற நிலைமைகள் பேச்சுவார்த்தைகளிற்கான வாய்ப்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என இந்த விடயம் குறித்து நன்கறிந்த மூவர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுதந்திரத்தின் பின்னர் எதிர்கொண்டுள்ள மோசமான நிதி நெருக்கடியிலிருந்து அந்த நாட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் ஜப்பான் இலங்கைக்கு கடன்வழங்கும் நாடுகளின் மாநாட்டை ஏற்பாடு செய்ய முயல்கின்றது எனினும் இலங்கைக்கு அதிகளவு கடன்வழங்கிய நாடான சீனா இந்த மாநாட்டில் இணைந்துகொள்ளுமா என்பது தெரியவில்லை என இந்த விடயம் குறித்து அறிந்த தரப்பொன்று தெரிவித்தது.
இலங்கையின் நிதி குறித்து தெளிவின்மை காணப்படுகின்றது எனவும் அந்த தரப்பு தெரிவித்தது.
இலங்கையின் 6.2மில்லியன் டொலர் கடன் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்றால் இந்த வருட இறுதிக்குள் சீனாவுடன் இணைந்து இலங்கை குறித்த மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு ஜப்பான் தயார் எனவும் விடயமறிந்த தரப்பு தெரிவித்தது.
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன்வழங்கும் முக்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ஜப்பானை கேட்டுக்கொள்ளவுள்ளதாக கடந்த வாரம் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தார்.
அடுத்த மாதம் ஜப்பான் பிரதமருடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேன் என அவர் தெரிவித்தார்- முன்னாள் ஜப்பான்பிரதமர்சின்சோ அபேயின் இறுதிநிகழ்விற்காக இலங்கை ஜனாதிபதி ஜப்பான் செல்லவுள்ளார்.
இலங்கை அதிகளவு கடன்களை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஜப்பானிற்கு இலங்கையை மீட்கவேண்டிய பங்குள்ளது - இலங்கையை அதன் 3 பில்லியன் டொலர் கடனிலிருந்து விடுவிப்பது மாத்திரமில்லை - பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டிய தேவையும் உள்ளது.
இலங்கையின் 29 பில்லியன் டொலர் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக புதன்கிழமை சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்,கொழும்பு சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 3 பில்லியன் டொலர்களை பெறமுயல்கின்றது.
அன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி ஜப்பான் தூதுவரை சந்தித்திருந்தார்.
இலங்கைக்கு கடன்வழங்கும் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு புதிய தளம் அவசியம் என ஜப்பான் கருதுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் முன்னோக்கி நகர்வது குறித்து ஆர்வமாகவுள்ளது ஆனால் இதனை ஜப்பான் மாத்திரம் செய்ய முடியாது என தெரிவித்த விடயமறிந்த வட்டாரங்கள் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்தன.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சு கருத்து தெரிவிக்கவில்லை,கருத்து கூறுமாறு விடுக்கப்பட்டவேண்டுகோளிற்கு இலங்கையின் மத்திய வங்கியும் நிதியமைச்சும் உடனடியாக பதிலளிக்கவில்லை,சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் கருத்து கூற மறுத்துவிட்டார்.
இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதல்கள் எல்லை தகராறுகள் குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன,என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இலங்கை தனது நிதிநடவடிக்கைகளை மறுசீரமைப்பு செய்வதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்,கடன் குறித்து மேலும் தகவல்களை வெளியிடவேண்டும்எனவும்விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதம் முன்னாள் ஜனாதிபதி நாட்டிலிருந்து தப்பியோடியதை தொடர்ந்து ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றவேளை ஜனாதிபதிக்கு இலங்கைமக்களின் முயற்சிக்கும் தன்னால் முடிந்தளவு ஆதரவை வழங்க சீனா தயார் என தெரிவித்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
பெருமளவு கடன்வழங்குநர்கள் காரணமாக கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நடவடிக்கைகள் குழப்பமானவையாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள விடயமறிந்த தரப்புகள் கடன் அளவை விட குறைவாக பெற்றுக்கொள்ள சீனா மறுக்கின்றது கொழும்பின் கடன்சுமையை குறைக்கவும் அது தயாராகயில்லை என தெரிவித்துள்ளன.
குறைந்த வருமானம் உள்ள நாடுகளை இலக்குவைத்து ஜி20 நாடுகள் உருவாக்கிய கடன்மறுசீரமைப்பு கட்டமைப்பு போன்ற ஒன்றை உருவாக்குவது குறித்து ஜப்பான் சிந்திக்கின்றது எனினும் இலங்கை நடுத்தர வருமான நாடு என்பதால் இலங்கை இந்த கட்டமைப்பிற்குள் அடங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது இலங்கைக்கு கடன்வழங்கிய அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் தளமாக காணப்படவேண்டும், கடன் தள்ளுபடியில் அனைவருக்கும் சமமான பங்கு காணப்படவேண்டும் என ஒரு தரப்பு தெரிவித்தது.
இந்த நிபந்தனைகள் முடிவடையும் வரை பேச்சுவார்த்தைகள் வெற்றியளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என மூன்றாம் தரப்பொன்று தெரிவித்தது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments