Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கோட்டாபய நாடு திரும்புவது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கருத்து!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விரைவில் இலங்கை வருவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அவர் இலங்கையை விட்டு வெளியேறியபோது ஏற்பட்ட நிலைமையை நாம் அனைவரும் அறிவோம். அவர் இலங்கையை ஒரு அழகிய சூழலில் விட்டுச் செல்லவில்லை. அவர் திரும்பி வந்தால், முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவர் இலங்கைக்கு வருவார் என நம்புகிறோம் என்றார்.

Post a Comment

0 Comments