Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கிறிஸ் ராக்!


ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ் ராக்(Chris Rock) நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மார்ச் மாதம், நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு(Will Smith) முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின்(Will Smith) மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக்(Chris Rock), நகைச்சுவையாக பேசினார்.

அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக்(Chris Rock) கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித்(Will Smith) மேடைக்கு சென்று கிறிஸ் ராக்(Chris Rock) கன்னத்தில் அறைந்தார்.



சக நடிகரை வில் ஸ்மித்(Will Smith) தாக்கிய சம்பவம் உலக அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை கிறிஸ் ராக்(Chris Rock) நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments