Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உக்ரைனில் இருந்து மூன்று தானிய கப்பல்கள் பயணம்...!


உக்ரைனின் துறைமுகங்களிலிருந்து 3 கப்பல்கள் தானியங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளதாகத் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யப் படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து இதற்கு முன்னதாக, முதன்முறையாக உக்ரைனியத் துறைமுகமான ஒடேசாவிலிருந்து தானியக் கப்பல் ஒன்று கடந்த திங்கட்கிழமை புறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 3 கப்பல்கள் சென்றுள்ளன.

உக்ரைனியத் தானிய விநியோகங்கள் போரால் தடைபட்டுள்ளதால் உலகளாவிய ரீதியில் பஞ்சம் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக எச்சரித்திருந்தது.

அது தொடர்பில் ஐ.நாவும் துருக்கியும் மொஸ்கோவுக்கும் கீவுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான உடன்பாடு எட்டப்படுவதற்குக் கைகொடுத்துள்ளன. அதன்படி தானியங்களை ஏற்றிச்செல்லப் பாதுகாப்பான விநியோகப் பாதையை ஏற்படுத்தித்தர ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளன.

Post a Comment

0 Comments