Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!


முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தி நிரிஎல்லவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய வெள்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (19) வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க , பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக உற்பத்தியாளர் , வழங்குனர், விநியோகத்தர் அல்லது வியாபாரி என எந்த தரப்பினரும் விற்பனை செய்யவோ , விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments