Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாகிஸ்தான் வரி விதிப்பால் கடும் பாதிப்பு போராட்டத்தில் ஆதன நிறுவனங்கள்...!



பாகிஸ்தான் ஆதன விற்பனைத் துறைக்காக அரசு அளித்துள்ள நிதியை நிராகரித்துள்ள ஆதன நிறுவனங்கள், இத்துறையின் மீது அரசு விதித்துள்ள கடுமையான வரிச்சுமையை குறைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இவ்வருடத்துக்கான ஆதனங்களின் மீதான வரிகளை அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. இவ்வரிவிதிப்பான ஆதன நிறுவனங்களை நடத்திச் செல்ல முடியாத நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் இத்துறை சார்ந்த பலர் தொழில் இழக்க நேரிடும். பாக். மத்திய அரசு கொஞ்சமும் கருணையற்ற வரிகளை அறவிட்டு வருகிறது என்று ஆதன வர்த்தக சம்மேளனம் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் ஆதன விற்பனை வர்த்தகத்துறை முக்கியமான ஒரு துறை என்றும் பெருமளவிலான வெளிநாட்டு நிதியை கொண்டுவரக் கூடியது என்றும் சுட்டிக்காட்டியுள்ள இச் சம்மேளனம், கடுமையான வரிவிதிப்பானது இவ்வர்த்தகத்தை நிலை குலையச் செய்திருப்பதாக கூறியுள்ளது.

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகிறது. அதன் தற்போதைய நிதிப் பற்றாக்குறை 17.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது. உலக அளவில் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுவதால் பாகிஸ்தானின் இறக்குமதிக்கான செலவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேசமயம் இருதரப்பு மற்றும் பன்னாட்டு உடன்படிக்கைகள் வாயிலாக வெளிநாட்டு பண வரவு குறைந்துள்ள நிலையில் நிதி நெருக்கடி கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments