Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சிங்கப்பூரில் இரத்தாகும் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம்...!

 

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் 337ஏ சட்டப்பிரிவை இரத்து செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சிங்கப்பூரில் உள்ள ஓரின (எல்ஜிபிடி) செயற்பாட்டாளர்கள், "இது மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி" என தெரிவித்துள்ளனர்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இன்னும் அமலில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக பல நாடுகள் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி வருகின்றன.

ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments