Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன? போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் உத்தியின் ஓரங்கமா?


நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப் போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளை ஜனநாயகப்போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட ஜனநாயகப்போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடந்த சில தினங்களாக காலிமுகத்திடலில் கரையொதுங்கிவரும் சடலங்கள் மூலம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதற்கு உரியவாறான தீர்வை வழங்கவேண்டும் என்றும், முறையற்ற பொருளாதார நிர்வாகத்தையும் தவறான தீர்மானங்களையும் மேற்கொண்ட ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 4 மாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது நாட்டில் பல்வேறு அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இருப்பினும் அப்போராட்டங்களின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும், தேடப்பட்டும் வரும் பின்னணியில் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினால் இன்று (02) செவ்வாய்க்கிழமை கொழும்பு, மருதானையிலுள்ள சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments